தினமுரசு விற்று இறந்தவர்களிற்கும் நீதி வேண்டும்; அனுசியா - சந்திரகுமார்
ஏனையோருக்கு கிடைக்கும் நியாயம் தினமுரசு பத்திரிகை விற்றமைக்க்காக கொல்லப்பட்ட எமக்கும் கிடைக்க வேண்டும் என யாழ் மாநகர சபையின் ஈ.பீ.டீ.பி உறுப்பினர் அனுசியா - சந்திரகுமார் கூறியுள்ளார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக தோன்றி சாட்சியம் அளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகளை எடுத்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் யாழ் மாவட்டச் செயலகத்தில் நேற்று தமது பணியில் ஈடுபட்டனர்.
இதன்போது அவர் அனுசியா - சந்திரகுமார் மேலும் கூறுகையில்,
செல்லையா- கந்தையா என்னும் எனது தந்தை 1996 முதல் 2006 வரை தினமுரசு பத்திரை முகவராக பணியாற்றியவர். இவர் மீது 2006-10-12 அன்று கச்சேரி நல்லூர் றோட்டில் புலிகள் கிளைமோர் தாக்குதலை மேற்கொண்ட போது தந்தை தலையில் காயமடைந்து ஒரு மாதம் சிகிச்சை பெற்று உயிர் தப்பி ஆறு மாதம் வாழ்ந்த நிலையில் அதன் பாதிப்பால் உயிரிழந்தார்.
நாம் 4 பெண் பிள்ளைகள். தினமுரசு பத்திரிகையில் பணியாற்றிய காரணத்திற்காக எனக்கு எல்லாளன் படை என புலி முத்திரையுடன் எச்சரிக்கை கடிதம் 3 முறை வந்தது. இவை 2006 முதல் 2007 வரை இவை இடம்பெற்றன.
அப்போது தினமுரசு பத்திரிகை விற்ற பலர் சுடப்பட்டனர். அதனால் எமக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். தினமுரசு உண்மையை போட்டதனால் சுட்டதாக கூறிய அனுசியா, அங்கு பணியாற்றிய ஆறுபேர் இவ்வாறு சுடப்பட்டனர்.
இதேநேரம் 2015ஆம் ஆண்டு முதல் தினமுரசு தினசரி பத்திரிகையாக மாறி வெளிவந்தபோதும் தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பத்திரிகையின் ஆசிரியர்களாக அற்புதன், பாலநடராய ஐயர், ஸ்ரான்லின் ஆகியோர் ஆசிரியராக பணியாற்றினர். எனது கல்விக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே உதவினார். எனவே ஏனையோருக்கு கிடைத்த நியாயம் எமக்கும் கிடைக்க வேண்டும் என்றார்.