ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு இன்று (25) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து மாநகரசபை மண்டபம் வரை படுகொலைக்கு நீதி வேண்டி ஆர்பாட்டம் இடம்பெற்றது .
இதில் தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகரசபை முதல்வர் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கோரி சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்,
நீண்ட காலத்துக்கு பின்னர் இலங்கை வந்த அவரது மகனின் வேண்டுகோளுக்கு அமைய அவரது நீதி கோரும் வழக்கினை மீள எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கான நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைய எமது கட்சியின் பதில் பொது செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான M A சுமந்திரனால் ஜனாதிபதிக்கு பல மாதங்களுக்கு முன் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது.
அத்துடன் இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் நேரடியாக நீண்டகாலமாக பாராளுமன்றத்தில் மூன்று தடவைக்கு மேல் என்னால் கோரிக்கை முன் வைக்கப்பட்டது .
ஆனால் இன்றளவிலும் இதற்கான நடவடிக்கையை இவ் அரசு மேற்கொள்ளவில்லை. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். என தெரிவித்துள்ளார்.