காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு அடுத்த ஆறுமாதங்களில் நீதி
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு அடுத்த ஆறுமாதங்களில் நீதிவழங்கப்படும்என காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் மகேஸ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
காணாமல்போனவர்களை தேடும் பொறிமுறையை துரிதப்படுத்தியுள்ளதாகவும் இந்த செயற்பாடுகள் வெளிப்படையாக இடம்பெறுவதாகவும் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்தி
உலகின் வேறு எந்த நாட்டையும் விட இலங்கையில் குறிப்பிட்ட செயற்பாடுகளை துரிதமாக முன்னெடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காணாமல்போன தனிநபர்கள் குறித்த ஆரம்பகட்ட விசாரணையின் முதற்கட்டத்தினை டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் முதற்கட்ட விசாரணைகள் பூர்த்தியானதும் காணாமல்போனவர்கள் சான்றிதழ் அல்லது மரணச்சான்றிதழை பெற விரும்பும் குடும்பத்தவர்களுக்கு அது கையளிக்கப்படும் எனவும் காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.