தொப்பை கொழுப்பை குறைக்க இதை மட்டும் செய்தால் போதும்!
இன்றைய காலகட்டத்தில் அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை கொழுப்பு தான். நம்மிடம் உள்ள சில தீய பழக்கங்கள் எடை அதிகரிப்பிற்கு காரணமாகின்றன.
இதிலிருந்து விடுபட, பலர் ஜிம்மில் பயிற்சி, டயட், கடுமையான உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்கின்றனர்.
அதிலும் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தாலும் வயிறு தொப்பை மட்டும் குறையவில்லையே என்னும் வருத்தம் பலருக்கும் இருந்துகொண்டே இருக்கும்.
மேலும் தொப்பை கொழுப்பு ஒரு நபரின் நம்பிக்கையையும் இழக்க நேரிடும் மற்றும் பொது இடத்தில் சங்கடத்தை சந்திக்க நேரிடும்.
தொப்பை கொழுப்பை குறைக்க என்ன செய்யலாம்?
1. காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும் காலை எழுந்தவுடன் தேநீர் அல்லது காபி குடிப்பதை நம்மில் பலரும் வழக்கமாக வைத்திருப்பார்கள். அப்படி செய்வது உடல் நலனிற்கு கேடு விளைவிக்கும். காலை எழுந்தவுடன் முதல் வேலையாக நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
அப்படி குடிக்கும்போது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுகள் வெளியேறும். மலச்சிக்கல் ஏற்படாது. வெதுவெதுப்பான நீர் அருந்துவதே நல்லது. ஆயுர்வேதத்திலும் இதன் பலன்கள் கூறப்பட்டுள்ளன.
தேன் கலந்த வெதுவெதுப்பான நீரையும் குடிக்கலாம், இது உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த வழியாகும்.
2. காலை உணவை ஆரோக்கியமாக வைத்திருங்கள் நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அது காலை உணவில் இருந்து தொடங்கப்பட வேண்டும். இதற்கு, காலை உணவில் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
குறிப்பாக புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள். முட்டை, பால், உலர் பழங்கள், முளைகள், பழங்கள், பழச்சாறுகள் அல்லது காய்கறி சாறுகளை இந்த பட்டியலில் சேர்க்கலாம்.
3. உடற்பயிற்சி செய்யுங்கள் உடல் எடையை குறைக்க, நீங்கள் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம். இதன் காரணமாக, இடுப்பு மற்றும் வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு குறையத் தொடங்குகிறது, பின்னர் உடல் எடையை குறைக்கிறது.
அதனால்தான் அதிகாலையில் எழுந்து ஓடுவது, ஜாகிங் செய்வது, யோகா செய்வது, ஜிம்மிங் போன்றவை மிகவும் அவசியம். உடற்பயிற்சி மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம் மற்றும் நோய்களைத் தவிர்க்க உதவுகிறது.
4. உடலில் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடாது உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அது நமது வளர்சிதை மாற்றத்தை பாதிக்கும்.
மனித உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது, எனவே உடலில் நீரேற்றம் இருக்கவில்லை என்றால், உடலின் செயல்பாட்டில் சிக்கல்கள் ஏற்படும், மேலும் உடல் எடையை குறைக்க முடியாது.
5. நல்ல தூக்கம் முக்கியமாகும் நீங்கள் உடல் கொழுப்பை குறைக்க விரும்பினால் முதலில் உங்களுக்கு நல்ல தூக்கம் முக்கியமாகும். உடற்பயிற்சிகளை செய்வதால் மட்டும் உடல் கொழுப்பை குறைக்க முடியாது.
அதற்கு குறைவான அளவில் சாப்பிட வேண்டும். ஆனால் சரியான அளவில் தூக்கம் இல்லாத போது அவர்கள் அதிகப்படியான உணவுகளை எடுத்துக்கொள்கின்றனர். எனவே நாம் நல்லப்படியாக உறங்குவது மிக முக்கியமாகும்.
6. ஆல்கஹால் வேண்டாம் தொப்பை ஏற்படுவதற்கு ஆல்கஹாலும் ஒரு காரணமாக உள்ளது. ஆல்கஹால் பானங்களில் வெற்று கொழுப்புகள் மற்றும் கலோரிகள் உள்ளன.
நீங்கள் தொடர்ந்து இவற்றை குடித்து கொண்டிருந்தால் அது உங்கள் அடி வயிற்றில் போய் சேரும். இதனால் அடி வயிற்றில் தொப்பை ஏற்படும்.