இந்த ஆண்டில் இரு முறை குரு பெயர்ச்சி ; குவியப்போகும் அதிர்ஷ்டம் யாருக்கு தெரியுமா?
ஜோதிடத்தின் படி, முழு சூபர் என அழைக்கப்படக்கூடியவர் குருபகவான். இவர் ஒவ்வொரு ராசியிலும் ஒரு ஆண்டு காலம் சஞ்சரிக்கக்கூடியவர்.
இந்த ஆண்டு குருபகவான் மிதுனம் மற்றும் கடக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இவர் தரக்கூடிய அதிர்ஷ்ட பலன்கள் எந்தெந்த ராசிக்கு கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.
குரு பெயர்ச்சி
குரு பகவான் ஒரு மே 14ம் திகதி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். அங்கு வெறும் ஆறு மாதங்களே சந்திக்கக்கூடிய நிலையில், அவர் அதிசார பெயர்ச்சியாக வேகமாக முன்னோக்கி நகர்ந்து, அக்டோபர் 18ம் திகதி கடக ராசிக்கு மாற உள்ளார். டிசம்பர் 5ம் திகதி வரை கடகத்தில் சஞ்சரிக்கக் கூடிய குரு பகவான் எந்தெந்த ராசிகளுக்கு வெற்றி, நிதி லாபம் கிடைக்கும், குடும்ப சுகத்தைத் தருவார் என தெரிந்து கொள்வோம்.
விருச்சிக ராசி
குரு பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கக் கூடிய காலத்தில், அவரின் ஐந்தாம் பார்வை விருச்சிக ராசி மீது விழுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு பலவிதத்தில் நன்மை கிடைக்கக்கூடியதாக அமையும். வேலை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலை தேடுபவர்களுக்குத் தகுதிக்கேற்ப பதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி, சம்பள உயர்வு அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் அதிக பணத்தை சம்பாதிப்பீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கையில் இனிமையும், காதலும் நிறைந்திருக்கும்.
மகர ராசி
கடக ராசியில் குரு சஞ்சரிக்கக்கூடிய காலத்தில், அவரின் நேரடி 7ம் பார்வை உங்கள் ராசி மீது விழுகிறது. அப்படி சூழ்நிலையில் உங்களின் வேலை மற்றும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் நிறைய நன்மைகளை அடைவீர்கள். குருவின் அருளால் திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல துணை அமையும். குழந்தைப் பேறு கிடைத்து வாழ்க்கையில் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பாக முன்னேற்றமான சூழலும், சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வணிகம் தொடர்பான உங்களின் திட்டங்கள் நல்ல பலனைத் தரும். திடீர் நிதி ஆதாயங்கள் பெறுவீர்கள்.
மீன ராசி
கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் குருபகவான் தனது ஒன்பதாம் பார்வை, மீன ராசி மீது விழுகிறது. இதன் காரணமாக உங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஏழரை சனி காலம் நடந்தாலும் வாழ்க்கையில் கடினமான சூழலில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். நீங்கள் செய்யக்கூடிய தொழில், வேலையில் முன்னேற்றமும், பண ஆதாயமும் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் சிறப்பாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.