ஜூலை மாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சிறிய வீழ்ச்சி
கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுற்றுலாப் பயணிகள் வருகை
ஜூலை மாதத்தில் மொத்தம் 1,96,845 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இது கடந்த 2025 -ஆம் ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.7% குறைவு ஆகும்.
நாட்டுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஜூலை மாதத்தில் மட்டும் இந்தியாவிலிருந்து 44,547 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது மொத்த வருகையில் 26% ஆகும்.
இதேவேளை, நாட்டுக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன்படி, பிரித்தானியாவிலிருந்து 21,834 பயணிகள் வருகை தந்துள்ளனர்.
அதேவேளை, கடந்த ஜனவரி 01 முதல் ஜூலை 31 வரையிலான 7 மாத காலப்பகுதியில் மொத்தம் 13,43,418 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.