ஜுலை 83... சிங்கள காடையர்களால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்கள் ; யாழில் நடந்தது என்ன!
இலங்கையில் 1983 தமிழர்களுக்கு எதிரான கலவரம் வெடித்த நாள். கொழும்பில் தொடங்கி, பின்னர் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது. பல நாடுகளுக்கு உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஈழத்தமிழர்கள் பிறந்த நாட்டைவிட்டு வெளியேற அடித்தளமிட்ட சம்பவம்.
ஈழத் தமிழ் மக்கள் வரலாற்றில் மறக்கமுடியாத காலங்கள் அவை. நம் அடுத்த சந்ததிகளுக்கு கடத்தப்படவேண்டிய வரலாற்று நிகழ்வு. சொந்த நாட்டில் வாழ வழியின்றி நாட்டைவிட்டு தமிழர்கள் அகதிகளாக துரத்தப்பட்ட வலி மிகுந்த காலம்.
தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்கள்
சிங்கள காடையர்களால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்கள் , நாடளாவிய ரீதியில் ஏழு நாட்களில், முக்கியமாக சிங்களக் கும்பல் தமிழ் மக்களைத் தாக்கியது, எரித்தது, கொள்ளையடித்தது மற்றும் கொன்றது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் (jaffna) - திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் கண்ணி வெடித்தாக்குதலை மேற்கொண்டனர்.
அந்த தாக்குதலை தொடர்ந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இலங்கை ராணுவம் செய்த அட்டூழியங்களின் துயர சம்பவங்களை நேரில் பார்த்தவர்களின் திகில் அனுபவங்கள்......