வெளிவிவகார அமைச்சருடன் ஜூலி சங் விசேட கலந்துரையாடல்
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல் குறித்து அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
அமெரிக்காவுடன் இலங்கையின் வர்த்தக உறவை சமநிலைப்படுத்துவது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது.
அமெரிக்கா ஏற்றுமதிகளுக்கு ஈடான அணுகுமுறை வழங்கும் முக்கியத்துவத்தை நான் இதன்போது வலியுறுத்தினேன்.
நியாயமான, சமநிலைபடுத்தப்பட்ட வர்த்தக உறவு பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது மேலும் இரு நாடுகளிலும் தொழில்துறைகளை வலுப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.