இலங்கைப் பெண்ணால் கண்கலங்கிய நடுவர்கள்!
தென்னிந்திய பிரபல தொலைக்காட்சியில் ‘மகா நடிகை’ என்ற புதிய ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது.
இந்நிகழ்ச்சி நாளை (5) தொடங்கவுள்ள நிலையில் நடிப்பில் சாதிக்கத் துடிக்கும் சாமானிய பெண்கள், தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் போட்டியாக நிகழ்ச்சியின் நடுவர்களாக விஜய் ஆண்டனி, நடிகைகள் சரிதா, அபிராமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
கண்கலங்கிய நடுவர்கள்
நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த கவிப்பிரியா என்ற பெண் கலந்து கொண்டுள்ளார். மகாநடிகை நிகழ்ச்சிக்கான கிராண்ட் லான்சில் கவிப்பிரியா, பெண் மருத்துவருக்கு நடந்த கொடுமை பற்றி நடித்து காட்டியிருக்கிறார்.
கவிப்பிரியா, எமோஷ்னலாக நடித்துக் காட்டியதால் அரங்கில் இருந்த அனைவரும் கண்கலங்கினார்கள். நடிகை சரிதா, அபிராமி மேடைக்கு வந்து உருக்கமாக பேசியிருக்கிறார்கள்.
தற்போது மகாநடிகை நிகழ்ச்சியின் பிரமோ இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.