கொடுத்த வாக்கை மறவாத நீதிபதி இளஞ்செழியன்; நெகிழவைத்த தருணம்
யாழ்ப்பாணத்தில் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் கடமையாற்றிய போது அவரது மெய் பாதுகாவலராக இருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர சுட்டுபடுகொலை செய்யப்பட்டிருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரியால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது ஐந்தாவது ஆண்டு நினைவு நாள் கடந்த 22ம் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வு ஹலவத்தை ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் நீதிபதி இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்றது.
நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய போது நீதிபதியை பாதுகாத்து வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர மரணமடைந்ததையடுத்து அவரது குடும்பத்தின் அனைத்துப் பொறுப்புகளையும் நீதிபதி இளஞ்செழியன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதோடு ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளின் கல்வி விடயங்களை தொடர்ந்து கவனித்து வரும் நீதிபதி, சார்ஜன்ட் ஹேமச்சந்திர இறந்தபோது அவரது குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றையும் நிர்மாணித்து கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.