ஜோ பைடனின் அதிரடி உத்தரவு: நெருக்கடியில் பாகிஸ்தான் பிரதமர்!
பாகிஸ்தானின் அமெரிக்க தூதராக மசூத் கான் (Masood Khan) நியமனத்தை அதிபர் ஜோ பைடன் (Joe Biden) ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் அமெரிக்க தூதராக பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான மசூத் கான் என்பவரை பிரதமர் இம்ரான்கான் (Imran Khan) நியமித்துள்ளார்.
மேலும், இது குறித்து அமெரிக்க பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
இதேவேளை, மசூத் கான் செயல்பாடுகள் பயங்கரவாத ஆதரவு, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு குறித்து அமெரிக்க எம்.பி., அறிக்கை அளித்தார். இதையடுத்து மசூத் கான் நியமனத்தை உடனே ரத்து செய்யுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுப்பதாக மத்திய அரசு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தது. இச்சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிரடி உத்தரவு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.