ஜே.என் 1 புதிய கொரோனா: சுகாதார அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
JN 1 புதிய கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையில் பதிவாகவில்லை என கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்றையதினம் (02-01-2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமீப நாட்களாக இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை.
எனினும், கடந்த கொரோனா பரவலின் போது பின்பற்றிய முறையான சுகாதார நடைமுறைகளைப் மீண்டும் பின்பற்றுமாறுபொதுமக்களை கேட்டுக் கொள்ளவதாகவும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண குறிப்பிட்டுள்ளார்.