ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆடி முருகவேல் விழா; வீதியுலா வந்த பாற்குட, காவடி பவனி
கொழும்பு 13 ஜெயந்திநகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி முருகவேல் விழா நேற்றையதினம் (31) கோலாகலமாக ஆரம்பமானது. ஆடி முருகவேல் விழாவில் இன்று செவ்வாய்க்கிழமை (01) பால்குட பவனியும் இடம்பெற்றது.
பெருமளவு பக்தர்கள் முருகனுக்கு நேர்ந்திகடன் எடுத்து ,காவடிகள் பால்குடபவனி, பன்னீர் காவடி என்பன சிறப்பாக நடைபெற்று வீதி ஊர்வலம் சென்றனர்.
வீதியுலா வந்த பாற்குட, காவடி பவனி
அத்துடன் , தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்ட நாதஸ்வர கலை சுடர் மணி செ. பரமசிவன் குழுவினரின் நையாண்டி மேளம் என்பனவும் பக்தர்களை பரவசப்படுத்தியது.
தொடர்ந்து உச்சிகால, மகேஸ்வர பூஜைகளும் இடம்பெற்று, நாளை புதன்கிழமை (02) காலை 6 மணிக்கு வசந்த மண்டப பூஜைகள் இடம்பெற்று, ஶ்ரீ வள்ளி தேவசேன சமோத ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி சித்திர இரதத்தில் எழுந்தருளி வெளிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து இன்னருள் புரியவுள்ளார்.