எகிறிய தங்கம் விலையால் நகைப்பிரியர்கள் க்ஷாக்!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று(13) தங்கம் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளமை நகை வாங்க காத்திருந்தோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று (செப்டம்பர் 12ஆம் திகதி) ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.53,640க்கும், ஒரு கிராம் ரூ.6,705க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 13ஆம் திகதி) ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.6,825 -க்கும் ஒரு சவரன் ரூ.54,600க்கும், விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.99 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5,591 க்கும், ஒரு சவரன் ரூ. 44,728க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3.50 உயர்ந்து ரூ.95க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.