ஜனனி உடனான உரையாடல் ; இலங்கையர்களின் இதயங்களை வென்ற ஜிபி முத்து!(Video)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனை கோலாகலமாக , நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும். போட்டியாளர்கள் அனைவரும் வீட்டிற்குள் நுழைந்துள்ள நிலையில், ஒவ்வொரு தருணமும் பரபரப்பாகவும், சுவாரஸ்ய நிகழ்வுகளுடனும் சென்று கொண்டிருக்கிறது.
சூடு பிடிக்கும் டாஸ்க்குகள்
ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி, அடுத்தடுத்து டாஸ்க்குகள் மூலம் சூடு பிடிக்கவும் தொடங்கி உள்ளது. இந்நிலையில், ஜிபி முத்து மற்றும் ஜனனி ஆகியோர் இடையே உரையாடல் தொடர்பான வீடியோ, தற்போது பார்வையாளர்கள் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
Thalaivan pure gold da❤️#GPMuthuArmy ? #jananiarmy #GPMuthu #BiggBossTamil6 #BiggBoss pic.twitter.com/52NGWHCYmK
— GP MUTHU ARMY (@Kuttysi14746781) October 10, 2022
ஜிபி முத்து ஜிபி முத்து தனியாக வீட்டில் இருந்த போது பயத்துடன் கமலிடம் பேசியது, மழையில் போட்ட ஆட்டம், நாய் சத்தம் கேட்டு பயந்தது என ஜிபி முத்து செய்யும் அனைத்து விஷயங்களும் ட்ரெண்ட் ஆகத் தான் செய்கிறது.
அந்த வகையில், தற்போது நடந்த ஒரு சுற்றில், உங்களுக்கு பிக்பாஸ் வீட்டில் யாருடைய நட்பு வேண்டும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஜிபி முத்து, இலங்கையை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனியின் நட்பு தான் வேண்டும் என கூறினார்.
இதற்காக அவர் சொன்ன காரணம் தான், தற்போது இந்தியாவை தாண்டி இலங்கை மக்களின் நெஞ்சங்களையும் வென்றுள்ளது. "தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இங்குள்ள எல்லோருக்கும் என்னை தெரியும்.
ஆனால், தங்கச்சி (ஜனனி) என்ன சொன்னார் என்றால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுடன் கலந்து கொள்ள போவதால் அவரது நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என ஜனனியிடம் சொல்லி உள்ளார்கள்.
இதனால், தங்கச்சியுடன் நட்பு மூலமா இலங்கை மக்களின் நட்பு இன்னும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறேன். என்றைக்கும் நாம் பாசமாக இருப்போம்" என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய ஜனனி, "ஏற்கனவே அங்குள்ள மக்களுக்கு உங்களை பிடிக்கும். இதனால் அதை பற்றி நீங்கள் பெரிதாக யோசிக்க வேண்டாம்" என தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை மக்கள் நட்பு தொடர்பாக ஜிபி முத்து பேசிய வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
You My Like This Video