சூப்பர்டி தங்கக்குட்டி; பிக்பாஸ் வீட்டில் ரக்சிதாவின் செல்லப்பிள்ளையான ஜனனி!
பிரபல தொலஒக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களை தாண்டி புலம் தமிழர்களையும் ஈர்துள்ளது என கூறினால் மிகையாது. அதற்காரணம் நிகழ்சியில் இலங்கை தமிழர்களையும் உள்வாங்குவதுதான் காரணம். அந்தவகையில் தற்போது பிக்பாஸ் 6 ஆவது சீசன் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கின்றது.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ள நிலையில் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து கோபமாக பேசியது குறித்து தான் வருந்துவதாக பிக்பாஸில் தனலட்சுமி சொன்னதை அடுத்து, தனலட்சுமி பேசிய விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றும், ஜிபி முத்து நமக்கெல்லாம் அப்பா மாதிரி, அவர் கோபப்பட்டாலும் நீ பொறுத்து போயிருக்க வேண்டும் என்றும் ஜனனி குறிப்பிட்டார்.
அதன் பின்னர் ஜனனியிடம் ஆயிஷாவும், விக்ரமனும் தனலட்சுமி தரப்பு நியாயத்துக்காக வாதிட்டனர். இதன் பின்பு ஜனனி சென்று, சோஃபாவில் இருந்த ரச்சிதாவின் மடியில் அமர்ந்தார்.
அப்போது ஜனனியை, “சூப்பர்டி தங்கக்குட்டி.. நீ இன்னும் பேசுடி.. அழகா பேசுற” என கொஞ்சிய நடிகை ரச்சிதா, ஜனனியை கூட்டிக்கொண்டு எழுந்து அவரை அழைத்துச் சென்றபடி,
“சரி வா.. அடுத்து யார் மாட்டுவானு பார்ப்போம்.. ” என்று சொல்லிக்கொண்டே செல்கிறார். அதற்கு ஜனனியோ, “சிரித்தபடி,.. அச்சச்சோ” என்கிறார். நடிகை ரச்சிதா மகாலட்சுமி சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பயணத்தை தொடங்கியவர்.
பின்னர் விஜய் டிவி மற்றும் கலர்ஸ் தமிழின் சில சீரியல்களிலும் நடித்தவர், அதன் பின்னர் கன்னட திரைப்படம் உட்பட, சில திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார்.
இந்நிலையில் தற்போது தமது அடுத்த கட்டத்தை நோக்கி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்திருக்கிறார்.