மீண்டும் நடிக்க வரும் நடிகர் விஜய்
விஜய்யின் நடிப்பில் உருவாகி கடந்த ஜனவரி மாதம் 09ஆம் திகதி வெளியாகவிருந்த திரைப்படம் ஜனநாயகன். எனினும் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை மற்றும் தேர்தல் காரணமாக இந்த திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று ஜனநாயகன் முழு படமும் இணையத்தளத்தில் வெளியாகியது. திரைப்படம் சம்பவம் படக்குழு, விஜய் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜனநாயன் திரைப்படம்
இதற்கு ரஜினி, கமல், சிரஞ்சீவி, சிவகார்த்திகேயன், சூர்யா, கார்த்தி என பல திரைப்பிரபலங்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஜனநாயன் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடு செய்வதற்காக மீண்டும் ஒரு புதிய படத்தில் நடித்து கொடுக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த திரைப்படத்தை நெல்சன், அட்லீ அல்லது லோகேஸ் இயக்க வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.