ஜோசப் பரராஜசிங்கத்தின் நினைவு தினங்களை புறக்கணித்த ஜனா? காரணம் என்ன?
மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டு அவரின் நினைவு தினம் வருடந்தோறும் நடைபெற்று வரும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த ஜனா ஒரு தடவை கூட அவரது நினைவு தினத்தில் கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து ஊடகவியலாளர்கள் ஜனாவிடம் கேள்வி எழுப்பிய போது தன்னைப் படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஜோசப் பரராஜசிங்கம் உதவினார் என்ற காரணத்திற்காக தான் அவரது நினைவு தினங்களில் கலந்து கொள்வதில்லை என்று பதில் வழங்கி உள்ளார்.
ஜனா என்கிற கோவிந்தன் கருணாகரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெலோ அமைப்பில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்திய கொலைகள், காட்டிக் கொடுப்புக்கள் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் தண்டனை பட்டியலில் ஜனா சேர்க்கப்பட்டு அவரை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சி செய்தபோது அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்திருந்ததார்.
2002 ம் ஆண்டு ஆயுதக் குழுக்களை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உருவாக்கி போது குறித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஜனா என்கிற கோவிந்தன் கருணாகரணை மாத்திரம் சேர்க்க கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அந்த அளவுக்கு டெலோ ஜனா தமிழ் மக்களுக்கு எதிராக மன்னிக்க முடியாத குற்றங்களை செய்திருந்தார்.
டெலோ ஜனாவை படுகொலை செய்வதற்கு மட்டக்களப்பில் உள்ள திரையரங்கம் ஒன்றினுள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர் பதுங்கி இருந்த போது அதில் இருந்து அவர் மயிரிழையில் உயிர் தப்பி இருந்தார்.
குறித்த தாக்குதலை நடாத்துவதற்கு தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் யோசப் பரராஜ சிங்கம் அவர்கள் உதவினார் என்ற காரணத்திற்காக அவரது மரண வீட்டிற்கும் மட்டக்களப்பு மாவட்ட நடைபெற்ற ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் எந்த வோரு நினைவு தினத்திலும் இதுவரை ஜனா கலந்து கொள்ளவில்லை.
அப்போது இருந்தே தமிழரசுக் கட்சியை இல்லாதொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார் ஜனா.
இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளின் அழிவுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வந்த ஜனா முதலில் செய்த வேலை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்ட டெலோவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பிரசன்ன இந்திரகுமாரை பிரித்தெடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் டெலோவை தனியாக செயற்பட தூண்டினார்.