அதிக விலைக்கு முட்டைகளை விற்றால் சிறை!
அரசாங்கம் நிர்ணயித்த விலை வரம்புகளுக்கு உட்பட்டு முட்டைகளை விற்பனை செய்யாத அனைத்து வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தண்டனைகள்
முட்டைகளை அதிக விலைக்கு விற்றால் குறைந்த பட்ச அபராதம் 1 இலட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதம் 5 இலட்சம் ரூபாவும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஒரு நிறுவனத்துக்கு குறைந்தபட்ச அபராதம் 5 லட்சம் ரூபாவும் அதிகபட்ச அபராதமாக 50 லட்சம் ரூபாவும் 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.
வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச விலை 43 ரூபாவாகவும் சிவப்பு முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நிர்ணயித்து அரசாங்கம் தற்போது வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.