வெல்லம் நீரிழிவு நோயாளர்களுக்கு உகந்ததா!
பழங்காலத்திலிருந்தே வெல்லம் சமையலறையில் மட்டுமல்ல ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
வெல்லம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைக்கு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது.
காணப்படும் சத்துக்கள்
வெல்லத்தில் ஃபோலிக் அமிலம், இரும்பு, கால்சியம், செலினியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள்உள்ளன.
இந்த சத்துக்கள் பல நோய்களை உடலில் இருந்து விலக்கி வைக்கிறது.
வெல்லம் என்பது கரும்பிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருளின் ஒரு வடிவம் என்று விளக்குகிறார். இதில் 65-70 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது.
தயாரிப்பு
அதே சமயம் வெள்ளை சர்க்கரையில் 99.5 சதவீதம் சுக்ரோஸ் உள்ளது.வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது வெல்லத்தில் சுக்ரோஸ் குறைவாக இருப்பதால், அதை உட்கொண்ட பிறகு குளுக்கோஸ் அளவு மெதுவாக அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரத்த சர்க்கரை அளவில் வெல்லத்தின் தாக்கம் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட குறைவு தான். ஆனால் கிளைசெமிக் இன்டெக்ஸ் எனப்படும் ஒரு முக்கிய காரணி காரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது அவ்வளவு நல்லதாக கருதப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
வெல்லம் மற்றும் சர்க்கரை ஒரு ஒப்பீடு
கரும்புச் சர்க்கரையை விட வெல்லத்தில் உள்ள புரதச் சத்து அதிகம். எனினும் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரைக்கு சிறந்த மாற்றாக வெல்லம் உட்கொள்ளலாம் என்று ஆய்வு பரிந்துரைக்கவில்லை என கூறப்படுகிறது.
சத்துக்கள் நிறைந்த வெல்லம்
கரும்பு உற்பத்தி மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் வெல்லம் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள், குறிப்பாக இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் நல்ல வெல்லம் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.