யாழில் இளைஞன் செய்த விபரீத செயல் ; இதற்காகவா இப்படி? துயரில் கதறும் தாய்
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாத காரணமாக இளைஞர் ஒருவர் நேற்று(06) தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
தாயாரின் அடையாள அட்டையை பயன்படுத்தி, சிம் அட்டை ஒன்றினை வாங்கி தருமாறு குறித்த இளைஞர் தாயாரிடம் கோரிய நிலையில், வாக்குவாதமாக மாறியுள்ளது.
அதன் பின்னர், குறித்த இளைஞர் தனக்கு தானே தீ வைத்துக் கொண்டு, வயலுக்குள் உள்ள கிணற்றுக்குள் பாய்ந்து உயிர்மாய்த்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.