யாழில் பெரும் சோகம்... சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த குடும்ப் பெண்!
யாழ்ப்பாண பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண்ணொருவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்றையதினம் (03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் செட்டிக்குறிச்சி பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த குணசேகரம் வரதசுரோன்மணி என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் நேற்றையதினம் அவரது வீட்டுக்கு அருகேயுள்ள காணிக்குள் சென்று பனையோலை எடுத்தவேளை அதனுள் இருந்த கருங்குளவி அவர்மீது கொட்டியுள்ளது.
இந்த நிலையில் அவர் சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.