யாழில் தனிமையில் வசித்து வந்த பெண்ணின் வீடு உடைத்து கொள்ளை!
police
jaffna
women
meesalai
By Sulokshi
யாழ்.மீசாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் சுமார் 9 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மீசாலை வடக்கு - பூதவராயர் கோவிலை அண்மித்த பகுதியில் தனிமையில் வாழும் பெண் ஒருவர் பாதுகாப்பு கருதி உறவினர் ஒருவரின் வீட்டில் இரவில் உறங்குவதற்கு சென்றுள்ளார்.
அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் வீட்டை உடைத்து உட்புகுந்து சுமார் 9 பவுண் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடியுள்ளனர்.
அத்துடன், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரீ.வி கமராவின் சேமிப்பு தொகுதியும் துாக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US