யாழில் நடந்த பயங்கர விபத்து: இரண்டு இளைஞர்கள் ஆபத்தான நிலையில்!
யாழில் கே.கே.எஸ் வீதி தாவடி சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிள் - வானும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவது,
மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக யாழ் நோக்கி திரும்பிய ஓட்டுமடத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களும், யாழில் இருந்து கே.கே.எஸ் பக்கம் சென்று கொண்டிருந்த தென்னிலங்கையை சேர்ந்த வானுமே நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு இளைஞர்களும் எதிர் திசையில் வெகு தூரம் தூக்கி எறியப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியதுடன் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் வண்டியும், வானும் பலத்த சேதத்திற்கு உள்ளாகிய நிலையில் சம்பவ இடத்தில் காணப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.