யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னால் இன்று மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து
போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், வெடுக்குநாறி மலையில் இருந்த விக்கிரகங்கள் மற்றும் சூலங்கள் பிடுங்கி வீசப்பட்டமை பேரினவாத சக்திகளின் மதக் குரோதத்தை எடுத்துக்காட்டுகிறது என சுட்டிக்காட்டினர்.
மேலும் மாணவர்கள் ஐ.எம்.எவ் இடம் பிச்சை எடுத்து தொடர்வது இன அழிப்பா, மண் துறந்த புத்தருக்கு மண்மீது ஆசையா, வெடுக்குநாறிமலை எங்கள் சொத்து, எமது நிலம் எமது உரிமை என பதாதைகளை தாங்கியவாறு மாணவர்கள் கோஷமிட்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.