யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தில் மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவசரகாலச் சட்டம், நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இவற்றை அரசாங்கம் கண்டுகொள்ளாததற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பொறியியல் பீடம், தொழிநுட்ப பீடம் மற்றும் விவசாய பீட மாணவர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
74 வருட கால அனர்த்தத்தை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சூழ்ந்துள்ள பொலிஸாரையும் படைகளையும் அகற்றுங்கள், அடுத்த தலைமுறைக்காக நாட்டைப் பாதுகாப்போம், கோட்டாவுக்குச் செல்லுங்கள், மனித உரிமை மீறல்களை நிறுத்துங்கள் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் .


