தேசிய மட்ட தடகள போட்டியில் பதக்கங்களை வென்று குவித்த யாழ்ப்பாண மாணவர்கள்!
யாழ்ப்பாணத்தின் தியகம ராஜபக்ச மைதானத்தில் கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள போட்டிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த போட்டியில், பருத்தித்துறை - ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த மாணவர்கள் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
மேலும், இதில் ஹாட்லிக் கல்லூரி மாணவனான தருண் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 31.60 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
இதேவேளை, ஆர்.சஞ்சய் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் 31.91 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளனர்.
மேலும், கனிஸ்ட பிரிவினருக்கான தேசிய மட்ட தடகள தொடரில் பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் செய்த ஸ்ரீதரன் ஐங்கரன் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளனர்.
இதில் 16 வயதுப் பிரிவினருக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஸ்ரீதரன் ஐங்கரன் 27.45 மீற்ரர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
கனிஸ்ட பிரிவினருக்கான 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான தேசிய மட்ட தடகள போட்டியில் சம்மட்டி எறிதலில் நெல்லியடி மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த விஷ்ணுப்பிரியன் வெண்கல பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.