கோலாகலமாக ஆரம்பமானது சந்நிதி முருகன் பெருந்திருவிழா!
ஈழத்தின் வரலாற்றுச்சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் நேற்றையதினம் (16) மாலை 5.30 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
முருகப்பெருமானின் கொடியேற்ற திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
திருவிழாவில் பெருந்திரளான பக்தர்கள்
இந்நிலையில் சன்னதியானின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவானது நேற்றையதினம் ஆரம்பமான நிலையில் ஓகஸ்ட் 25ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும் , ஓகஸ்ட் 26ம் திகதி கைலாச வாகனமும் , ஓகஸ்ட் 29ம் திகதி சப்பறத் திருவிழாவும் , ஓகஸ்ட் 30ம் திகதி காலை 8 மணிக்கு தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
மேலும் ஓகஸ்ட் 31ம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 5 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
அதேவேளை குடாநாட்டு மக்கள் மட்டுமன்ற வெளி இடங்களில் இருந்து சன்னதி முருகனுக்கு அடியவர்கள் பெரும் திரளாக வந்து முருகனின் அருளை பெற்றுச்செல்வார்கள்.
வாய்கட்டி பூசை வழிபாடு
அதேசமயம் ஈழத்தின் வரலாற்றுச்சிறப்புமிக்க முருகன் ஆலயங்களுள் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயமும் ஒன்றாகும்.
அன்னதான கந்தன் என சிறப்பிக்கப்படும் சன்னதியான் முருகன் ஆலயம், வாய்கட்டி பூசை வழிபாடு இடம்பெறும் ஆலயங்களுள் சன்னதியான் முருகன் ஆலயமும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வரலாற்றுச்சிறப்புமிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.