யாழில் இருக்கும் இந்திய மீனவர்கள் 43 பேருக்கு நேர்ந்த நிலை!
யாழ்.சிறையில் இருந்த இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டபோதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தாயகம் திரும்புவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2021) டிசம்பர் மாதம் 19 மற்றும் 21ஆம் திகதிகளில் 8 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 55 மீனவர்களும் கடந்த 25 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும், விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரையும் விமானம் மூலம் அனுப்பி வைக்க சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு விமானப்பயணம் மேற்கொள்வதற்காக அவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொண்டபோது 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவுபெற்ற பின்பே தமிழகத்திற்கு பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.