யாழில் பிரதேசசபை உறுப்பினர் வீட்டின் மீது மீண்டும் தாக்குதல்!
யாழ்.மானிப்பாய் பிரதேசசபையின் தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் வீட்டின் மீது நேற்று 3வது நாளாகவும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாகுதல்காரர்களினால் வீட்டின் வேலிக்கு போடப்பட்டிருந்த தகரங்கள் வெட்டப்பட்டதுடன், வீட்டினுள் இருந்த உடமைகளும் தாக்கப்பட்டிருக்கின்றன. வீட்டில் வளர்க்கப்பட்டுள்ள கிளியும் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய பெயரை பயன்படுத்தி 3 நாட்களுக்கு முன் குறித்த பிரதேசசபை உறுப்பினரின் வீட்டினுள் புகுந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சித்திருந்தார்.
இது தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதைனையடுத்து தாக்குதல் நடத்த முயற்சித்த சந்தேகநபர் பிரதேசசபை உறுப்பினரும் குடும்பத்தினதும் தன் மீது தாக்குதல் நடத்தியதாக முறைப்பாடு செய்தார்.
இதற்கமைய நேற்றுமுன்தினம் பிரதேசசபை உறுப்பினரும் அவருடைய குடும்பத்தினரும் கூண்டோடு கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டும் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரதேசசபை உறுப்பினர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.