யாழ்.பருத்தித்துறையில் விபத்து: 5 பேருக்கு நேர்ந்த விபரீதம்!
யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை மந்திகை - மாலுசந்தி இடையில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 5 பேர் காயமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை (11-03-2022) இடம்பெற்றுள்ளது.
மேலும் விபத்து தொடர்பில் தெரியவருவது,

பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும், நெல்லியடி நோக்கி கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து சம்பத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் தனது இரண்டு பிள்ளைகளையும் பாடசாலையிலிருந்து ஏற்றிவந்தபோதே முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு விபத்து இடம் பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.