யாழ்.நல்லூரில் கடும் பதற்றம்: காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் - பொலிஸாருக்கும் இடையே முறுகல்
பொங்கலை முன்னிட்டு யாழ். நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம்பெறும் தேசிய பொங்கல் நிகழ்வுக்கு வருகை தரும் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சிவில் அமைப்புக்கள் பல்கலை மாணவர்கள் இணைந்து பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் போராட்டகாரர்கள் மீது பொலிஸார் தண்ணீர்தாரை பிரயோகம் மேற்கொண்டதுடன் குறித்த பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகின்றது.
மேலும், குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில், தொடர்ந்தும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நல்லூர் அரசடி வீதியில் அமைக்கப்பட்ட வீதித் தடைகளுக்கு முன்னால் இருந்தவாறு கோசங்களை வருகின்றனர்.