அரிசியில் சாயம் கலந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த மில் உரிமையாளருக்கு நேர்ந்த கதி!
அரிசியில் சாயம் கலந்த யாழைச் சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சுதுமலை பகுதியிலுள்ள அரிசி ஆலையொன்றில் பொது சுகாதார பரிசோதகர் ம.ஜெயபிரதீப் திடீர் பரிசோதனையை மேற்கொண்டவேளை, செயற்கை தவிட்டு சாயங்கள் கலந்த ஒரு தொகை அரிசியினை கடந்த ஓகஸ்ட் மாதம் மீட்டிருந்தார்.
மீட்கப்பட்ட அரிசி மாதிரிகளை மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக அநுராதபுரத்தில் உள்ள அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குறித்த பரிசோதனையில் அரிசியில் சாயம் கலக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
அதனடிப்படையில் குறித்த அரிசி ஆலை உரிமையாளருக்கு எதிராக கடந்த 04-10-2024 மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையில் உரிமையாருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.