அமெரிக்காவை கலக்கும் யாழ் தமிழர் ; உலககெங்கும் கிடைத்த பெரும் அங்கீகாரம்
அமெரிக்காவின் ஹாட்-டாக் மற்றும் டோனட்ஸ் மீதான அன்பைத் தாண்டி, நியூயோர்க் நகர மக்கள் தோசைகளை விரும்பி சாப்பிட தொடங்கி இருக்கின்றனர். அதற்கு காரணம் நியூயோர்க் நகரின் புகழ்பெற்ற தோசை மனிதர் என்று அழைக்கப்படும் திருக்குமார் கந்தசாமி.
திருக்குமார் கந்தசாமி யாழ்ப்பாணத்தில் ஒரு நீச்சல் பயிற்சியாளராக இருந்து 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏராளமான கனவுகளுடன் நியூயோர்க்கிற்கு குடிபெயர்ந்த இலங்கைத் தமிழர் தான் திருக்குமார் கந்தசாமி.
தோசை மனிதன் திரு
இன்று நியூயோர்க் தெருவோர தோசை கடைகளின் அடையாளமாக மாறி இருக்கிறார். ஆனால் தனது அம்மா மற்றும் பாட்டியிடம் இருந்து கற்றுக்கொண்ட காரம் நிறைந்த சீஸ் மசாலா தோசை தான் கடைசியில் அவரின் அடையாளமாக மாறியுள்ளது.
காலை 9 மணியளவில், வாஷிங்டன் ஸ்கொயர் பார்க் தெருக்களில் இவரது தள்ளு வண்டிக் கடையின் தோசையை சுவைக்க இந்தியர்களை கடந்து அதிகளவில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே கூடிவிடுவார்கள்.
திருவின் தோசைக்கு கனடா, ஜப்பான் மற்றும் கலிஃபோர்னியாவில் கூட ரசிகர்கள் இருக்கிறார்கள். தோசை மனிதன், NYDOSAS உள்ளிட்ட பக்கங்களே அதற்கு சாட்சி. திருவின் தோசை வண்டியின் சுவர்கள் உலகெங்கிலும் இருந்து அவருக்கு கிடைத்த செய்தித்தாள் வெட்டுக்கள் மற்றும் சான்றிதழ்களால் நிரம்பி காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர்.
அதேபோல் மசாலா தோசைகளுடன் காரம் நிறைந்த தேங்காய் சட்னி மற்றும் 11 வெவ்வேறு காய்கறிகளுடன் கூடிய பருப்பு சூப் வழங்கப்படுகின்றன.