யாழ். புகையிரத நிலையத்திற்கு அருகில் கசிப்பு உற்பத்தி!
யாழ் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் 28 வயதுடைய அதே இடத்தைச் சேர்ந்த நபரொருவர் பொலிஸ்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு
இதன்போது கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 30 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து சந்தேகநபர் கைதாகியுள்ளார்.
அதேவேளை யாழ் மாவட்டத்தில் அண்மைகாலகளில் குற்றச்செயல்கள் அதிகளவில் இடம்பெறுகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விசங்களை வெளியிட்டு வருகின்றனர்.