யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறை துரிதகதியில் புனரமைப்பு!
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு செல்லும் பாதை துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
குறிகாட்டுவான் இறங்குதுறை பகுதி புனரமைப்புப் பணிகள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் சிவில் விமான சேவைகள் அமைச்சின் 299 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆபத்தான நிலையில் பாதை
இந்த நிலையில், அதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி நடைபெற்றது.
அதேவேளை கடந்த மாதம் இறுதியில் ஏற்பட்ட பேரிடரில், குறிகாட்டுவான் இறங்குதுறை மற்றும் அதற்குச் செல்லும் பாதை மிக மோசமாக பாதிப்படைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது, இறங்குதுறைக்கு செல்லும் பாதை அகலமாக்கப்பட்டு, துரித கதியில் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.