யாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த மூத்த விரிவுரையாளர்!
யாழ்.கோப்பாய் கிருஷ்ணன் கோவில் சந்தியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நபர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று வியாழக்கிழமை (03-03-2022) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இந்த விபத்தில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் கனகசபை பாஸ்கரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்து தொடர்பில் தெரியவருவது,
கரவெட்டியில் உள்ள வீட்டிலிருந்து இரவு கல்வியியல் கல்லூரியில் அடைபெறவிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தந்தபோது வீதியில் வெளிச்சம் இன்றி நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியுடன் மோதி விபத்து நேரிட்டதாகத் தெரியவருகிறது.
மேலும் இந்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.