ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ். பல்கலைக்கு முதலிடம்!

University of Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Sundaresan Mar 26, 2023 05:34 PM GMT
Report

அகில இலங்கை ரீதியில் பல்கலைக் கழகங்களிடையே  நடைபெற்ற ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை முதலாம் இடத்தைக் பெற்றுள்ளது.

எட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில், நாற்பது இடங்களில் 25 இடங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை வென்று சாதனை படைத்துள்ளது.

ஹெல்வெற்றாஸ் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் அனுசரணையில், இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றத்தின் உதவியுடன் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பேராதனைப் பல்கலைக்கழகம்,  ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம்,  தென் கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பன பங்குபற்றியிருந்தன.

துறைசார் நிபுணர்களாலும், ஊடகத் தொழில்வாண்மையாளர்களாலும் சுமார் ஒரு வருடமாகத் தொடர்ச்சியாக வழங்கப்பட்ட செயலமர்வுகள், பயிற்சிகள் ஆகியவற்றைத் தொடர்ந்து, நான்கு பல்கலைக்கழகங்களிடையே இப்போட்டிகள் நடத்தப்பட்டிருந்தன.

ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ். பல்கலைக்கு முதலிடம்! | Jaffna In Media Creation Competitions University

இந்நிலையில் பல்லூடகக் கட்டுரைகள், வலைப்பூக்கள், மொபைல் புகைப்படங்கள், டிஜிட்டல் கமெரா புகைப்படங்கள், கருத்துப் படங்கள் மற்றும் டூடுள் சித்திரங்கள், மொபைல் வீடியோ கதை சொல்லல், குறும் படங்கள், டிஜிட்டல் நாடகங்கள் ஆகிய எட்டு பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் தலா 5 போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும், 6 போட்டிகளில் மூன்றாம் இடங்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் வெற்றி கொண்டனர்.

ஒவ்வொரு பிரிவிலும் 5 இடங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளில் டிஜிட்டல் கமெரா புகைப்படங்கள், கருத்துப் படங்கள் மற்றும் டூடுள் சித்திரங்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் அனைத்து இடங்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களே கைப்பற்றிக் கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்களில் நேரடியாகப் பங்குபற்றிய மாணவர்கள், தாம் பெற்ற விருதுகளுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில், கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன், விரிவுரையாளர்கள் தினேஷ் கொடுதோர், அனுதர்ஷி கபிலன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US