யாழில் உள்ள வீடொன்றில் மீட்கப்பட்ட அதிபயங்கர மர்ம பொருள்!
யாழில் உள்ள வீடொன்றின் கூரை திருத்த வேலையின் போது, கூரைக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த கைக்குண்டு யாழ்.கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்து இன்று (06-01-2022) மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வீட்டின் கூரை திருத்த வேலைகளை, வேலையாட்களை கொண்டு, வீட்டின் உரிமையாளர் இன்றைய தினம் காலை மேற்கொண்டு இருந்தார்.
இதன் போது கூரையின் மேல் பகுதியில் கைக்குண்டு ஒன்று மறைத்து வைக்கப்பட்டு இருந்ததனை வேலையாட்கள் கண்ணுற்று உரிமையாளருக்கு தெரிவித்தனர்.
இவ்வாறு கைக்கண்டு இருப்பதை வீட்டின் உரிமையாளர் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தைடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கைக்குண்டை மீட்டதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.