செவ்வந்திக்கு உதவிய யாழ் நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்து தடுத்து வைத்து விசாரிக்கப்படும் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு உதவிய இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கனகராசா ஜீவராசா என்ற "யாழ்ப்பாண சுரேஷ்” மற்றும் அந்தோணிப் பிள்ளை ஆனந்தம் ஆகியோர் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நேபாளத்தில் கைது
சந்தேக நபர்கள் இருவரும் அக்டோபரில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் மற்றும் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக கொழும்பு குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
"யாழ்ப்பாண சுரேஷ்" நேபாளத்தில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேபாளத்தில் கைது செய்யப்பட்ட "ஜே.கே. பாய்" என்பவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், படகை வழங்கியதாகக் கூறப்படும் ஆனந்தத்தை பொலிஸாரால் கைது செய்ய முடிந்தது.