கொட்டித்தீர்த்த அடைமழையால் வெள்ளக்காடான யாழ்ப்பாணம்; தத்தளிக்கும் நல்லூர்
நாட்டில் முழுவதும் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக யாழ் குடாநாடு முழுவதும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேசம் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரதேசமெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
சீரற்ற காலநிலையில் நாட்டில் வடக்கு கிழக்கு அடைமழை பெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடம் விவிசாய நிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கபப்ட்டுள்ளது.
நாடுமுவதும் வெள்ள அனர்த்தங்கள்
அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணத்தில் 253 மில்லி மீற்றராக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக் கழகத்தின் விடுதிகள் புதன்கிழமை (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பட்டுள்ளனர்.
பராக்கிரம சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் திடீர் வெள்ளம் குறித்து அவதானமாக இருக்குமாறு விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டி.பி.விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் மகாவலி அதிகாரசபை ஆகியவற்றுடன் இணைந்த தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் விமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளமைம் குறிப்பிடத்தக்கது.