யாழ்.மாவட்ட தனியார் வகுப்புகள் தொடர்பில் விரைவில் விசேட முடிவு
ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ் மாவட்டத்தில் இயங்கும் தனியார் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் யாழ் இந்துக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதேதெரிவித்தார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
மாணவர்கள் தற்போது கைத்தொலைபேசிக்குள் மூழ்கி இருக்கிறார்கள். அதிலிருந்து மாணவர்களை விடுபடவைக்க கலைச் செயற்பாடுகளுக்குள் ஈடுபடுத்த வேண்டும்.
வாரத்தில் ஒரு நாளாவது மாணவர்களை கலைச் செயற்பாடுகளில் ஈடுபட இடமளிக்கவேண்டும். என்னுடைய அடுத்த முயற்சி வாரத்தில் ஒருநாள் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதே எனத் தெரிவித்தார்.