யாழ். நீதிமன்றத்திற்குள் யுவதிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நீதிமன்ற ஊழியர்

Sahana
Report this article
யாழ். மல்லாகம் நீதிமன்றத்திற்குள் யுவதியுடன் பாலியல் தொல்லை கொடுத்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பொலிஸார் விசாரணை
மல்லாகம் நீதிமன்றத்தில் கடமை புரியும் 48 வயதுடைய, திருமணமாகாத குறித்த நபர், நீதிமன்றத்தில் வேலை செய்யும் 28 யுவதியுடன் தொடர்ச்சியாக பாலியல் கொடுத்துள்ளார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத குறித்த யுவதி இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இன்றையதினம் விசாரணைகளுக்கு அழைத்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் கைது செய்தனர்.
குற்றம் நிகழ்ந்த இடம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குள் உள்ளடங்குவதால் சந்தேகநபர் தெல்லிப்பழை பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டார்.
அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.