குரலற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளருக்கு யாழ் நீதிமன்றினால் பிடியாணை
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகனுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
கடந்த வருடம் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அந்த போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இது குறித்து மு.கோமகன் கருத்து தெரிவிக்கையில்,
எனக்கு வழக்கிற்கு வருமாறு இதுவரை எந்தவிதமான அழைப்பாணையும் வழங்கப்படவில்லை.
ஆனால் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகவும், வழக்தின்போது எனது பெயர் அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆகையால் எனக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. எனவே நான் சட்டத்தரணியூடாக நீதிமன்றில் ஆஜராகவுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.