கொழும்பில் யாழ் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் நள்ளிரவில் அந்தரிப்பு; உதாசீனம் செய்த சாரதி மற்றும் நடத்துனர்

Colombo Jaffna Negombo Srilanka Bus
By Sulokshi Oct 22, 2025 05:30 AM GMT
Report

    கொழும்பில் முன் பதிவு செய்துவிட்டு யாழ் பேருந்துக்காக காத்திருந்தவர்களை ஏற்றாது நள்ளிரவில் அத்ந்தரிக்க விட்டு சென்ற இ.போ.ச பேருந்து தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

முன் பதிவு செய்த பயணிகள் நிற்பதை அவதானித்தும்கூட , சாரதியும் , நடத்துனரும் அவர்களை உதாசீனம் செய்து ஏற்றாது சென்றதாக கூறப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொழும்பில் யாழ் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் நள்ளிரவில் அந்தரிப்பு; உதாசீனம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் | Jaffna Colombo At Midnight Bad Behavior Driver

முன்பதிவு செய்து காத்திருந்த  பயணிகள்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இரவு 10.30 மணிக்கு பயணத்தை ஆரம்பித்த பேருந்தில் , நீர்கொழும்பு பகுதியில் நின்று ஏறுவதற்காக மூவர் ஆசனங்களை முற்பதிவு செய்து விட்டு பேருந்துக்காக காத்திருந்தனர்.

அதன் போது, பேருந்தின் நடத்துனர் இரவு 11.45 மணியளவில் பேருந்து குறித்த இடத்திற்கு வரும் என பயணிகளுக்கு அறிவித்திருந்தார்.

அதனை அடுத்து பயணிகள் பேருந்துக்காக அவ்விடத்தில் காத்திருந்த போதும் 11.30 மணியளவிலும் தாம் பேருந்துக்காக காத்திருப்பதனை தொலைபேசி ஊடாக நடத்துனருக்கு பயணிகள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் யாழ் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் நள்ளிரவில் அந்தரிப்பு; உதாசீனம் செய்த சாரதி மற்றும் நடத்துனர் | Jaffna Colombo At Midnight Bad Behavior Driver

அதற்கும் நடத்துனர் அருகில் வந்து விட்டோம் 11.45 மணியளவில் அவ்விடத்தை வந்தடைந்து விடு வோம் என கூறியுள்ளார். அந்நிலையில் 11.45 மணிக்கு குறித்த பேருந்து அவ்விடத்தினை தாண்டி சென்றுள்ளது.

பயணிகள் மூவரும் பேருந்தினை வழி மறித்த போதிலும் , பேருந்தினை அவ்விடத்தில் நிறுத்தாது சாரதி தொடர்ந்து பயணித்துள்ளார். அதனை அடுத்து பயணிகள் நடத்துனருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த போதிலும் , நடத்தினர் தொலைபேசி அழைப்பினை ஏற்கவில்லை.

அந்நிலையில் சுமார் 30 நிமிடங்கள் கழித்து தொலைபேசி அழைப்பினை எடுத்த நடத்துனர் , பேருந்து குறிப்பிட்ட இடத்தில் நிற்பதாகவும் , அங்கு வந்து பேருந்தில் ஏறுமாறும் கூறியுள்ளார்.

யாழில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; அதிகாலையில் பரபரப்பு

யாழில் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு; அதிகாலையில் பரபரப்பு

உதாசீனம் செய்த சாரதி மற்றும் நடத்துனர்

பயணிகள் நிற்கும் இடத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் பேருந்தினை நிறுத்தி விட்டு , அங்கு வந்து ஏறுமாறு கூறினால் , தாம் நள்ளிரவு வேளை எவ்வாறு அங்கு சென்று பேருந்தில் ஏற முடியும் என நடத்துனரிடம் கோரியுள்ளனர். அதற்கு நடத்துனர் , குறித்த இடத்தில் நிற்கிறோம். வந்து ஏறுங்கள் என்றே கூறியுள்ளார்.

இது தொடர்பில் , இலங்கை போக்குவரத்து சபையின் பொறுப்பதிகாரியிடம் தொலைபேசி ஊடாக முறையிட்ட போதிலும் , அவரும் பொறுப்பற்ற விதத்தில் பதில் அளித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்து; பயணிகள் நிலை என்ன?

கொழும்பிலிருந்து பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்து; பயணிகள் நிலை என்ன?

அதேவேளை பேருந்து பயணத்திற்கு முற்பதிவு செய்தவர்களை இடையில் ஏற்றாது செல்லும் நிலைமைகள் அண்மைக்காலமாக அதிகரித்து உள்ளதாக பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முற்பதிவு செய்தவர்கள் இடையில் ஏறுவதால் , பேருந்து புறப்படும் போது , ஆசனங்கள் கேட்பவர்களை அந்த ஆசனங்களில் ஏற்றி செல்வதால் தான் இடையில் ஏற இருப்பவர்களை வேண்டும் என்றே ஏற்றாது செல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US