யாழ். சிட்டிவேரம் பகுதியில் விபத்தில் சிக்கி இளைஞன் பரிதாப மரணம்
யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிட்டிவேரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சின்னராசா துளசிகரன் எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (18.07.2026) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கொடிகாமம் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது மின் கம்பத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அதி தீவிர சீக்கிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை வழங்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பருத்தித்துறை ஆதார வைத்தியாசலையில் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.