யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: மூவர் பொலிஸில் சரண்

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation
By Shankar Jan 25, 2023 11:51 PM GMT
Report

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் இரு வன்முறைக் கும்பல் இணைந்து மற்றொரு கும்பலைச் சேர்ந்தவரை காருக்குள் வைத்து தீவைத்து கொலை செய்ய முயற்சித்த கும்பலில் மூவர் வவுனியாவுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் (25-01-2023) சட்டத்தரணி மூலம் மூவர் பொலிஸில் சரணடைந்துள்ளனர்.

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: மூவர் பொலிஸில் சரண் | Jaffna Chunnakam Sword Attack Suspects Surrendered

சுன்னாகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24-01-2023) முற்பகல் காரில் பயணித்த கனி என்றழைக்கப்படுவரை கொலை செய்யும் நோக்குடன் வாகனம் ஒன்றினால் மோதி விபத்தை ஏற்படுத்தப்பட்டது.

விபத்தின் பின் காருக்கு பெற்றோல் ஊற்றி தீவைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது என்று பொலிஸார் கூறினர்.

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: மூவர் பொலிஸில் சரண் | Jaffna Chunnakam Sword Attack Suspects Surrendered

இந்தச் சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபரான ஜெகன் வவுனியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸார் குறிப்பிடிருந்தனர்.

ஜெகன் கும்பலில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்.சுன்னாகத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்: மூவர் பொலிஸில் சரண் | Jaffna Chunnakam Sword Attack Suspects Surrendered

இந்த தாக்குதலைத் திட்டமிட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஜெகன், ரஞ்சித் மற்றும் முத்து என்றழைக்கப்படும் மூவர் வவுனியாவில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் சட்டத்தரணி மூலம் 3 பேர் சரணடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் 4 பேர் குறித்த தாக்குதல் சம்பவத்தோடு தொடர்புபட்டுள்ளனர் எனவும் அவர்களை விரைவில் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US