யாழ். செம்மணி விவகாரம்; சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அறைகூவல்

Jaffna chemmani mass graves jaffna
By Sahana Aug 31, 2025 07:30 PM GMT
Sahana

Sahana

Report

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழி விவகாரத்துக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அனைவரும் அணி திரள வேண்டுமென தென்னிந்திய பிரபல இயக்குநர் வ.கௌதமன் அறைகூவல் விடுத்துள்ளார்.

யாழில் 16 வயதான பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன?

யாழில் 16 வயதான பாடசாலை மாணவி உயிர்மாய்ப்பு ; நடந்தது என்ன?

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதியை நிலைபாட்டுவதற்கான, சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதற்கு அனைத்து தரப்பினரையும் ஓரணியில் திரளுமாறு தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சித்துப் பாத்தி மனிதப் புதைகுழியை தோண்ட தோண்ட தினமும் விதவிதமான கொடூரங்கள் அங்கே அரங்கேறி காட்சி அளிக்கின்றன. நேற்று முன்தினமும் சிறியதொரு மனித எலும்புத் தொகுதி ஒன்று பெரிய மனித எலும்புத் தொகுதியை அணைக்கும் விதத்தில் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். செம்மணி விவகாரம்; சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அறைகூவல் | Jaffna Chemmani Affair Everyone Unites To Demand

இது தாயினதும் சேயினதுமாகவே இருக்கக்கூடும். யுத்தத்தில் ஈடுபடாத தரப்பினரும் இங்கே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்கள் என்பது பல்வேறு வகையில் நிரூபணமாகிறது.

அதிலும் மழலைகளும், சிறுவர்களும் உள்ளடங்குகின்றார்கள் என்பது மனித குலம் மன்னிக்க முடியாத ஆகப்பெரிய கொடூரம். அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட இதுநாள் வரை எவ்வளவோ கொடூரமான காட்சிகளை பார்த்துவிட்டோம்.

இன்னமும் தோண்ட தோண்ட என்னென்ன அவலங்களை, கொடூரங்களை எல்லாம் காண வேண்டி இருக்குமோ என நினைக்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது. எமக்கே இப்படி இருக்கும்போது இழந்த உறவுகளுக்கு எவ்வளவு வலி இருக்கும் என்பது வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இது இவ்வாறு இருக்கையில் உள்ளகப் பொறிமுறை மூலம் செம்மணி மனிதப் புதை குழிக்கும், தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் காணப்படுகின்ற ஏனைய மனிதப் புதைகுழிகளுக்கும், வன்னி பெருநிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைக்கும், இனப்பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பது என்பது வேடிக்கையான விடயம்.

யாழ். செம்மணி விவகாரம்; சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இயக்குனர் கௌதமன் விடுத்துள்ள அறைகூவல் | Jaffna Chemmani Affair Everyone Unites To Demand

அழித்தவர்களிடமே நீதியை கேட்டால் அவர்கள் வழங்குவார்களா என்ன? யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்ட ஐ. நா.சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் யாழ்ப்பாண சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிக்கும் நேரில் சென்று அங்கே நிலைமைகளை பார்வையிட்டார்.

பின்னர் அது குறித்த மனித புதைகுழி ஆய்வுகளை மேற்கொள்வதற்கு எல்லாவிதமான உதவிகளையும் வழங்குவதற்கு தயார் என அவர் தெரிவித்தார்.

இது இவ்வாறு இருக்கையில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள ஏனைய பகுதிகளை ஸ்கான் நடவடிக்கை செய்வதற்கு நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

இருப்பினும் பாதுகாப்பு அமைச்சகம் அதற்கான அனுமதிகளை வழங்கவில்லை. இந்நிலையில் ஶ்ரீஜெயவர்வத்தன புர பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்கானர் கருவியை யாழ் பல்கலைகழகம் ஊடாக பெற்று ஸ்கேன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

செவ்வந்தியுடன் தொலைபேசியில் கதைத்து வரும் சந்தேகநபர்! விசாரணைக்காக அனுமதி கேட்ட பொலிஸ்

செவ்வந்தியுடன் தொலைபேசியில் கதைத்து வரும் சந்தேகநபர்! விசாரணைக்காக அனுமதி கேட்ட பொலிஸ்

ஆனால் அந்த கருவி துல்லியத்தன்மை குறைந்ததாகவே காணப்படுகின்றது. தற்போது அதனை விடவும் நவீனத்துவம் வாய்ந்த கருவிகள் சந்தைக்கு வந்துள்ளன.

அந்தக் கருவிகளை கொள்வனவு செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திடம் நிதி வசதி இல்லாவிட்டால் அதனை வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கின்றார்கள். அதுமட்டுமில்லாமல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கூட தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.

இது இவ்வாறு இருக்கையில் இலங்கை அரசாங்கம் ஏன் அந்த உதவிகளை பயன்படுத்துவதற்கு தயங்குகிறது? நீதியின்படியும் இல்லாமல் அறத்தின் படியும் நில்லாமல் இருக்கும் இலங்கை அரசு உள்ளகப் பொறிமுறை மூலம் இவர்கள் தீர்வு வழங்குவார்கள் என எந்த வகையில் நம்புவது? பாதிக்கப்பட்ட மக்களே உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதனை திணிப்பது தவறானது.

எம்மக்கள் விரும்புகின்றது போல சர்வதேச விசாரணை மூலமே இந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வினை வழங்க முடியும். எனவே சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதற்கு இனிமேலும் தாமதிக்காது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், தமிழர் தலைவர்களும் ஓரணியில் திரள வேண்டும் என உரிமையோடு தெரிவித்தார்.

யாழ்.கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்.கிளானையில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Nigeria, Markham, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US