யாழில் பாதுகாப்பு ஊழியரின் அடாவடிச் செயல்; வாடிக்கையாளர்கள் விசனம்
யாழில் அமைந்துள்ள அரசாங்க வங்கி ஒன்றின் தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் மூலம் பணம் பெறச்சென்ற வாடிக்கையாளர்கள் அசௌகரியத்தினை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் அமைந்துள்ள அரச வங்கி கிளையில் நேற்று முன் தினம் மதியம் (25) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தகாத வார்த்தை பிரயோகம்
தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தில் வாடிக்கையாளர்கள் நால்வர் பணம் மீளப்பெறுவதற்கு வரிசையில் நின்றுள்ளனர்.
இதன்போது வங்கி பாதுகாப்பு ஊழியர் தனக்கு அறிமுகமான பெண்ணொருவரை இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு உதவியதாக கூறப்படுகின்றது.
வங்கியின் உள்ளே இருந்து வந்த பாதுகாப்பு ஊழியர் , பெண்ணை வரிசையில் நிற்பவர்களை அலட்சியம் செய்து பணம் பெற உள்நுளைவதற்கு முற்படும்போது அங்கு நின்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அதற்கு பாதுகாப்பு ஊழியர் தகாத வார்த்தையில் பதிலளித்ததாக கூறப்படும் நிலையில் அங்கிருந்தவர்களை அவரது செயல் முகஞ்சுழிக்க வைத்தது.