யாழில் இருந்து சென்ற முச்சக்கர வண்டி தாய், இரண்டு பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கியது
திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதியில் மிரிஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று (19) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இருவர் படுகாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் பயணித்துள்ள நிலையில், முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி மின்கம்பத்துடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பலத்த காயமடைந்த இருவரும் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தூக்க கலக்கமே விபத்துக்கான காரணம் எனவும், விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.